Pona Usuru Lyrics

போன உசுரு வந்துருச்சு

Movie Thodari Music D. Imman
Year 2016 Lyrics Yugabharathi
Singers Haricharan, Shreya Ghoshal
போன உசுரு வந்துருச்சு 
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு 
இது போல ஒரு நாளே வர வேணுமாம் இனி மேலே 
நொடி கூட எட்டி இருக்காத 
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத 
 
போன உசுரும் வந்துருச்சு 
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு 
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் 
உன நானும் ஒட்டி இருப்பேனே 
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே 
 
சேர்ந்து இருக்கும் உள்ளத்துல 
துணை யாரு நமக்கு வெள்ளத்துல 
 
உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது 
 
நடந்தாலே அது சுகம் தானே 
 
துணையாக நானும் வாருவேனே 
 
சத்தியமா பக்கத்துல இருந்தா அனலும் குளிரா மாறுமே 
 
ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் 
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே 
ஓஹோ ஹோ ஹோ ஹோ  

 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.