கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்

Movie Name
Mupparimanam (2017) (முப்பரிமானம்)
Music
G. V. Prakash Kumar
Year
2017
Singers
Sathyaprakash
Lyrics
திரதினனே தினதினனே தெனெனெரே      
தனேனேரே நஹே நாஹிரே…....     
தினேதினரே தினேதினரே தெனெனெரே      
தெனேனேரே நஹே நாஹீரே……     
     
கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்     
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்     
வின்னோடு வின்னோடு பறந்துவிட்டேன்     
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே     
நீதானே…… ஓ……… என் தேடல்… ஓ… ஓ…     
உன் ஆசை உன்பார்வை உன் மேனி     
உன் சேட்டை உன் கொஞ்சல்     
நான் பார்த்து ஏதோ ஆனேனே……      (திரதினனே)
     
உன்னைவிட்டால் நெஞ்சிக்குள்ளே ஒன்னும் தோனாமல்     
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்     
துள்ளித்துள்ளி ஓடுகின்றப் பிள்ளைக்கண்டேனே     
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே     
வண்ண வெண்ணிலா வந்து போனதால்     
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே     
தண்ணீர் சிர்ப்பமாய் உன்னைக்கண்டேனே     
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே     
உன் ஆசை உன்பார்வை உன் மேனி     
உன் சேட்டை உன் கொஞ்சல்     
நான் பார்த்து ஏதோ ஆனேனே……      (திரதினனே)
     
பள்ளிக்கூட சீருடையில் உன்னைக் கண்டேனே     
காதல் பாடம் கண்களாளே கற்றுக்கொண்டேனே     
ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே     
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே     
சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ     
தள்ளிச்சென்றாலும் என் தாயின் நன்மை நீ     
மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா     
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ     
என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே     
தீக்கூடத்தித்திக்கும் பூவே உன்னாலே      
திரதினனே தினதினனே தெனெனெரே      
தனேனேரே நஹே நாஹிரே…....     
தினேதினரே தினேதினரே தெனெனெரே      
தெனேனேரே நஹே நாஹீரே……     (கண்ணோடு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.