Silu Silu Lyrics
சிலு சிலுவென்று
Movie | Vanamagan | Music | Harris Jayaraj |
---|---|---|---|
Year | 2017 | Lyrics | Madhan Karky |
Singers | Vijay Yesudas |
சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசைன பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இழையோடுதே
வெயில் வரம் தூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
(சிலுசிலு)
முட்கள் கிழிந்தாலுமே முத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாறுமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி
(சிலுசிலு)
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இழையோடுதே
வெயில் வரம் தூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
(சிலுசிலு)
முட்கள் கிழிந்தாலுமே முத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாறுமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி
(சிலுசிலு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Vanamagan Lyrics
Tags: Vanamagan Songs Lyrics
வனமகன் பாடல் வரிகள்
Silu Silu Songs Lyrics
சிலு சிலுவென்று பாடல் வரிகள்