Maappillai Machaan Lyrics
மாப்பிள்ளை மச்சான்
Movie | Anbu Magan | Music | T. Chalapathi Rao |
---|---|---|---|
Year | 1961 | Lyrics | A. S. Rajagopal |
Singers | S. Janaki, Seerkazhi Govindarajan |
ஓ..மாப்பிள்ளை மச்சான் மாப்பிள்ளை மச்சான்
மனசே உனக்கு எதுக்கு வச்சான்
வயசு பொண்ணு பின்னாலே
வாடுது பார் கண்ணாலே......
ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்
பொறுக்கி எடுத்த அழகு ரங்கம்
புரிஞ்சிக்கிட்டேன் ஒரு சொல்லாலே – ஓம்
போக்கு ஒண்ணும் நல்லால்லே
ஏய் பொம்பளத் தங்கம் பொம்பளத் தங்கம்
எதுக்கு இந்தக் கோபம் மச்சான்
என்னையும் உன்னையும் ஏம் படைச்சான்
இந்தக் கனி இனிப்புத் தனி மனசு வச்சா மண்மேலே
நாம் வாழ்ந்திடலாம் அன்பாலே (ஓ மாப்பிள்ளை)
எனக்குப் பொண்ணு இருக்கு ஒண்ணு
இனிக்க இனிக்க பழகும் கண்ணு
செங்கரும்பு அவ சிரிப்பு கண்ணு ரெண்டும் மத்தாப்பு
பொண்ணு பாக்க ரோஜாப்பூ.....(ஏய் பொம்பளை)
மனசில் உன்ன நெனச்ச பின்னே
மணக்க மாட்டேன் இன்னொரு ஆண
இன்னொரு பெண்ணைக் கொண்டாலே –நான்
இருக்க மாட்டேன் மண் மேலே
எதுக்கு இந்த வருத்தம் கண்ணே
எனக்குத் தகுந்த அழகுப் பெண்ணே
உனக்குச் சும்மா சொன்னேண்டி – என்
உள்ளமெல்லாம் நீதான்டி..(ஏய் பொம்பள)
ஆவணியில் மண உறவு
அன்னைக்கே நம்ம முதல் இரவு
வாழ்வில் இனி கொண்டாட்டம்
மகன் பிறப்பான் குண்டாட்டம்.....
Anbu Magan Lyrics
- Paal Koduththa Thanangal (பால் கொடுத்த தனங்கள்)
- Malar Gum Manam Veesum (மலர் கும் மணம் வீசும்)
- Kodukka Therindha Maname Unakku (கொடுக்கத் தெரிந்த மனமே உனக்கு)
- Oru Ooril Oru Rajah (ஒரு ஊரில் ஒரு ராஜா)
- My Dear Lady Pothunga (மை டியர் லேடி)
- Maappillai Machaan (மாப்பிள்ளை மச்சான்)
- Annam Pole Unnai (Sad) (அன்னம் போலே (சோகம்))
- Annam Pole Unnai (அன்னம் போலே (இன்பம்))