Song lyrics

Velan Varuvaanodi Lyrics

வேலன் வருவாரோடி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
R. Govardhanam
Year
1953
Singers
M. L. Vasanthakumari
Lyricist
T. K. Sundara Vathiyar
Velan Varuvaanodi

Lyrics

Velan Varuvaanodi Lyrics

வேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...

மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
தேனாகப் பேசி மையலானேன் என்ற
வடிவேலன் வருவாரோடி...

மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த
வடிவேலன் வருவாரோடி...
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற
வடிவேலன் வருவாரோடி...

தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
வடிவேலன் வருவாரோடி...

யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த
வடிவேலன் வருவாரோடி...
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...

People

Related People

3 people