நூறாய் யுகம் நூறாய் பாடல் வரிகள்

Movie Name
Kaali (2018) (காளி)
Music
Vijay Antony
Year
2018
Singers
Sangeetha Rajeshwaran
Lyrics
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கீடாய்

எதை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கென்றால்
உயிரால் தடுப்பேன்

நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்

பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உன்னை நிறைத்திடுவேன் தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்

உள்ளதாலும் உடலின் மீதும்
உன்னை சுமந்திடுவேன் தோழா
உலகம் அழியும் போதும் நானோ
உன்னை நினைத்திடுவேன்

இதயத்தின் மைய பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாள்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்

உந்தன் மடியில் நிரந்தரமாக
எனக்கிடம் கொடுத்தாய் தோழி
தெய்வம் வந்து நின்றால் கூட
திரும்பிட மறுப்பேன்

உனக்கு மட்டும் தானே எந்தன்
இருதயம் துடிக்கும் தோழா
உறங்கும் போதும் எந்த உதடோ
உந்த பெயர் அழைக்கும்

உனக்குள்ளே என்னை புதைப்பதால்
திரும்ப திரும்ப பிறப்பேன்
வழித்துணை நீ இருப்பதால்
இறுதி வரைக்கும் நடப்பேன்

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கீடாய்
எதை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கென்றால்
உயிரால் தடுப்பேன்


நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.