ரெட்டகிளி ரெக்கை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Bharathi Kannamma (1997) (பாரதி கண்ணம்மா)
Music
Deva
Year
1997
Singers
Mano, S. P. Sailaja
Lyrics
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க
எட்டு திசை எட்டி பறக்கும் மணம் கட்டவிழ்ந்து கிடக்க
நினைத்தால் போதும் நீளம் பூத்த நெடுவானம் நம் கைக்கெட்டும்
நிறைவேறாது காதல் என்று பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க

சின்ன சின்ன தூறல்களை தென்பொதிகை மேகம்
சிந்த சிந்த சில்லென்று தான் சில்லிட்டது தேகம்
பின்னி பின்னி நீ அணைத்தால் புல்லரித்து போகும்
இன்னும் இன்னும் என்ன சுகமோ
வண்டு வந்து வாயை வைத்து ஊதுகின்ற பூவே
விண்ணை விட்டு மண்ணை தொட்ட வட்ட வெண்ணிலாவே
உன்னை விட்டு நானிருந்தால் வாழ்க்கை ஒரு தீவே
ஒட்டி ஒட்டி வந்த உறவோ
பிறவி வரும் ஏழு தரம் நீ தொட நான் வருவேன்
இனியும் ஒரு தனிமை இல்லை வாழ்ந்திடும் நாள் வரை தான்
பூக்கோலம் ராக்கோலம் போடாமல் விடுவேனா
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க

வண்ண மணி சித்திரமே உன்னிடத்தில் கேட்டு
வாங்கிக்கொண்ட முத்தங்களை வட்டிகளை போட்டு
தந்துவிட வந்திருக்கேன் கன்னங்களை காட்டு
ஒவ்வொன்னாக எண்ணி தரவா
முத்தமிட்டு முத்தமிட்டு பட்ட காயம் போதும்
மஞ்சளைத்தான் நான் அரைத்து பூசினால் தான் போகும்
மேல் உதடும் கீழ் உதடும் மேலும் மேலும் நோகும்
இன்று சென்று நாளை வரவா
ஒதுங்குவதேன் பதுங்குவதேன் கூறடி மாங்குயிலே
ஹா.. உணர்ச்சியிலே நரம்புகளே ஓடுது மாலையிலே
ஏனென்று நானின்று சொல்லாமல் புரியாதா