அடியே உன் கண்கள் பாடல் வரிகள்

Movie Name
Rowthiram (2011) (ரௌத்திரம்)
Music
Prakash Nikki
Year
2011
Singers
Sadhana Sargam, Udit Narayan
Lyrics
அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே உன் தேசம் என்றால் நான் தான் Castro-வா
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சி கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

அடியே உன் கண்கள்......

ஆள் கொள்ளும் சேனை கொண்ட ஆயுதங்கள் ஏந்திக் கொண்ட
ஆரம்பித்த யுத்தம் ஒன்று பின்னால் நின்று தாக்காதே
மாவீரா முன்னால் நின்று உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயம் ஆகிப் போகாதே
மறைவேனா நானே நான் தீயை தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்தி குச்சி
விடுவேனா நானே நான் கொஞ்சிக் கொஞ்சிக் கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப் பச்சி
வேட்டைக்காரி காதல் காட்டில் நாளை மீழும் வேங்கை ஆட்சி
பதுங்காமல் என் மீது பாயும் புலி போல ஆகாதே நீயும்
கிளி போல ஆனேனே நானும்
யாழும் வாளும் மோதாமல் மோதும்

அடியே உன் கண்கள் .....

நூற்றாண்டு காலம் முன்பு மூழ்கிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே என்று வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஏகாந்த தீவில் இன்று ஏவாள் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று காற்றும் சொல்லக் கேட்டேனே
அமேசான் காடு நாம் ரெண்டே ரெண்டு பட்டாம் பூச்சி
ஆடிப் பார்ப்போம் கண்ணா மூச்சி
ஆரோவில் வீடு வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
நீ நீலக் கண்ணால் பாலம் போட தூக்கம் போயே போச்சு
ஓ விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோட்டம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க

அடியே உன் கண்கள் ........

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.