புலரும் வாழ்வின் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Dharala Prabhu (2020) (தாராள பிரபு)
Music
Vivek - Mervin
Year
2020
Singers
Yazin Nizar
Lyrics
புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ

மனதை சூழும்
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே
மழலை சொல்லில்
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே

ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ….
ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ…..

காற்றில் நீ கை அசைத்தால்
ஓவியம் தோன்றுதே
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்
கவிதை ஆகுதே

நான் உன்னை தோளில் தூக்க
பாரங்கள் தீருதே
நாளையும் வாழ வேண்டும்
ஆசை தூண்டுதே

வேற் யாரு என்ற போதும்
என் அன்பு ஒன்று ஏராளமா
ஏராளமா…..
உன் தாய் என்று உறவாட
என் தாரம் தாராளமா……ஆஆ….

வீடென்ற ஒன்று இன்று
உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம்
பார் எந்தன் கண்ணோரமா….

மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….

மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….

புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.