Chapter 110

குறிப்பறிதல்

Kuripparidhal

Recognition of the Signs

10 kurals

Kural 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart
Kural 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore
Kural 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
She looked; looking bowed her head And love-plant was with water fed
Kural 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile
Kural 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
No direct gaze; a side-long glance She darts at me and smiles askance
Kural 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
Their words at first seem an offence But quick we feel them friendly ones
Kural 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks
Kural 1098 அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
What a grace the slim maid has! As I look she slightly smiles
Kural 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
Between lovers we do discern A stranger's look of unconcern
Kural 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
The words of mouth are of no use When eye to eye agrees the gaze