Chapter 112

நலம் புனைந்து உரைத்தல்

Nalampunaindhuraiththal

The Praise of her Beauty

10 kurals

Kural 1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
Soft blessed anicha flower, hail On whom I dote is softer still
Kural 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed
Kural 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes
Kural 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes
Kural 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!
Kural 1116 மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
Stars are confused to know which is The moon and which is woman's face
Kural 1117 அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
Are there spots on the lady's face Just as in moon that changes phase?
Kural 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.
Like my lady's face if you shine All my love to you; hail O moon!
Kural 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!
Kural 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair