Chapter 133

ஊடலுவகை

Ootaluvakai

The Pleasures of Temporary Variance

10 kurals

Kural 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு.
He is flawless; but I do pout So that his loving ways show out
Kural 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives
Kural 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth?
Kural 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
In long pout after embrace sweet A weapon is up to break my heart
Kural 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms
Kural 1326 உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
Sweeter than meal is digestion And sulk in love than union
Kural 1327 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
The yielder wins in lover's pout Reunited joy brings it out
Kural 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
Shall not our pouting again give The dew-browed joy of joint love?
Kural 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells!
Kural 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
Bouderie is lovers' delight Its delight grows when they unite