மாலை கருக்களில் சோலை பாடல் வரிகள்

Movie Name
Neethiyin Marupakkam (1985) (நீதியின் மறுபக்கம்)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே

உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன்
உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன்
நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும்
செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ சொல்லடி

மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ

மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா
உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா
நீ அழவோ பொன்மணியே நீர் விழவோ கண் வழியே
கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீர தாங்காது இந்த மனம் - வா தேவியே

மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.