எங்கமக்கா எங்கமக்கா பாடல் வரிகள்

Movie Name
Puli (2015) (புலி)
Music
Devi Sri Prasad
Year
2015
Singers
Mano
Lyrics
எங்கமக்கா எங்கமக்கா
ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா

காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா

கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே…
ஏய் புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு சுற்றிவரும் சூரப்புலி
புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி
அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றிபெறும் வீரப்புலி


மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா?
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா?

எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா?
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா?

உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது

மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே

எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே
எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே

சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே

திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே

வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே

நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.