இவன் சென்னை மா பாடல் வரிகள்

Movie Name
Bhooloham (2015) (பூலோகம்)
Music
Srikanth Deva
Year
2015
Singers
Haricharan
Lyrics
இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்
வலை வீசும் வீடியோவின் 
விலை பேசும் மீடியாவின்
தூண்டிற் புழு ஆக மாட்டான்
இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 
ஓ... ஓ... ஓ... ஓ... 

சோப்பு சீப்பின் பேராலே ஒரு யுத்தம் தானே
நோயை விற்கும் கேமரா இவன் லென்ஸு தானே
ஊட்டச் சத்து மாவென்பான்
சாப்பிட்டா தான் மூளையாம்
நாட்டை மார்க்கெட்டாக்கியே விளையாடுறாண்டா
மாடல் பாத்து ஓடாதே வாழ்க்கை உன்னோடதே
காரு வாங்க அழைப்பார் ஏது பெட்ரோல் டீசலு
ஷாம்பூ கூந்தல் ரோப்பாய் மாறி 
காரை இழுக்குதாம்
சென்டை பூசிக் கொண்டால் 
எந்த பெண்ணும் ஈஸியாம்
சாஹசங்களே விளம்பரமா
பாரம்பரியம் தகர்ந்திடுமா...

இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 

ஓ... ஓ... ஓ... ஓ... 

வியாபாரம் நாடாளுதாம்
வர்த்தக விளம்பர சூதாட்டம் தான்
ஹே கல்வித் துறை வியாபாரம்
ஆஸ்பத்திரி வியாபாரம் பந்நாட்டு வியாபாரம்
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
பண்டம் விற்க வந்துட்டாண்டா
உள் நாடே தேங்கிப் போச்சேடா

இந்த உலகமே வியாபாரம் தான்
மதக் கலவரம் வியாபாரம் தான்
பக்தி பரவசம் வியாபாரம் தான்
நாட்டில் இலவச வியாபாரம் தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.