மாயம் செய்தாயோ என்னை நான் பாடல் வரிகள்

Movie Name
Adiyum Andamum (2014) (ஆதியும் அந்தமும்)
Music
L.V. Ganeshan
Year
2014
Singers
Chinmayi
Lyrics

மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே

விழிகளில் வானவில்லை கோர்த்து
செவியினில் புன்னகையும் சேர்த்து
முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே
வானத்தில் மிதக்கும் மேகம் போலே

உன்னைத் தேடிக் கரைந்த உள்ளம்
சிறகின்றி இன்று தான் பறந்ததே
காற்றைப் போல் வீசி ஏனோ
சிறகின்றிப் பறந்தேனோ

கண்ணா நான் உன்னை அடைய
நான் வரைந்த சித்திரமோ
என் முன்னே நிற்குதேனோ
அன்பே நீ என்னை ஏத்துக்க

நீ தான் நீ தானோ நான் வாழும் அர்த்தமோ
இமையில் இமையில் அருகில் நின்றாய் நின்றாய்
எந்தன் உறக்கம் கொண்டுச் சென்றாயோ
கண்ணைக் கட்டி உன்னை
காட்டில் விட்டால் கூட
என்னை வந்தடைவாயோ....(மாயம்)

நான் விரலால் தொடும் போது
நீ என்னைப் பார்க்கும் போது
கண்ணால் நாம் பேசிக்க
நாம் வாழும் வாழ்வே என்றும்

முடிவில்லா வாழ்வாய் மாறும்
அன்பே நீ ஏண்டா யோசிக்க
எந்தன் உயிரோ பிரிந்தாலும்
உனக்குள் வாழ்வேனோ

தேடல் தேடல் இனி உந்தன் தேடல்
எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்
இரவும் பகலும் இனி மாறும் மாறும்
என்னால் உந்தன் உலகம் மாறிப் போகும்..(மாயம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.