காதல் என்பதை பாடல் வரிகள்

Movie Name
Kullanari Koottam (2011) (குள்ளநரி கூட்டம்)
Music
V. Selvaganesh
Year
2011
Singers
Hariharan
Lyrics
காதல் என்பதை காதல் என்பதை 
முத்தத்தில் கொடுத்துவிட்டாய் 
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய் 
நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது 
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது 
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ 
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

காதல் என்பதை காதல் என்பதை 
முத்தத்தில் கொடுத்துவிட்டாய் 
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய் 

ஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ.. ஓ.


நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும் 
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும் 
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் 
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய் 
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் 
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய் 
என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க.. ஓ...... 

காதல் என்பதை காதல் என்பதை 
முத்தத்தில் கொடுத்துவிட்டாய் 


நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும் 
மொழியின் தூரம்தான் காற்றோடு முடியும் 
காற்றின் தூரமோ பூமியில் முடியும் 
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும் 
காற்றின் தூரமோ பூமியில் முடியும் 
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும் 
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க (இசை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.