குள்ளநரி கூட்டம் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Kullanari Koottam (2011) (குள்ளநரி கூட்டம்)
Music
V. Selvaganesh
Year
2011
Singers
Shankar Mahadevan
Lyrics
Na. Muthukumar
சிறுநரிக்கூட்டம் சேர்ந்து 
சிங்கத்தை வீழ்த்தும் போது சீற்றமாய் 
சென்றிடவேண்டும் 
பாரா உஷார்....... 
கண்களில் தந்திரம் வேண்டும் 
கவனமாய் சென்றிட வேண்டும் 
கெட்டதை வென்றிட வேண்டும் 
பாரா உஷார்..... 
குள்ளநரி குள்ளநரி கூட்டம் 
புது குள்ளநரி கூட்டம் 
கண்ணைக்கட்டி ஆடும் 
ஒரு கண்ணாம்மூச்சி கண்ணாம்மூச்சி ஆட்டம் 
நேராக நேராக நடப்பதை விடுடா 
தலைகீழாக கீழாக நினைத்ததை முடிடா 

சிறுநரிக்கூட்டம் சேர்ந்து 
சிங்கத்தை வீழ்த்தும் போது சீற்றமாய் 
சென்றிடவேண்டும் 
பாரா உஷார்....... 


தேனை அள்ள தேன் கூட்டடில் 
தீ வைத்தால் தவறா 
துன்பத்தை வெல்ல தவறெல்லாம் சரியாகும் மனிதா 
தலைமுறை கோபம் வரும் வரும் 
தலை முதல் பாதம் சுடும் சுடும் 
தண்டனையாவும் தரும் தரும் 
தருமம் சாகாதே.... 
கரையினில் அலைகள் தொடும் தொடும் 
கரைந்ததும் மீண்டும் வரும் வரும் 
உண்மையும் அதுபோல் 
தொடர்ந்திடும் என்றும் தூங்காதே 
நேராக நேராக கடப்பதை விடுடா 
தலைகீழாக கீழாக நினைத்ததை முடிடா 

சிறுநரிக்கூட்டம் சேர்ந்து 
சிங்கத்தை வீழ்த்தும் போது சீற்றமாய் 
சென்றிடவேண்டும் 
பாரா உஷார்....... 


ஹோ பேயைப்போல எங்கெங்கும் லஞ்சத்தின் கொடுமை 
தீமையெல்லாம் தீ வைத்து எரித்தால்தான் இனிமை 
பாரத நாட்டில் தினம் தினம் தலைவிரித்தாடும் பணம் பணம் 
யாரிதைக்கேட்பார் இடம் வலம் எங்கும் பேயாட்டம் 
இளைஞர்கள் கூட்டம் வரும் வரும் 
இழந்ததையெல்லாம் பெறும் பெறும் 
நேராக நேராக கடப்பதை விடுடா 
தலைகீழாக கீழாக நினைத்ததை முடிடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.