வாங்கும் பணத்துக்கும் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Dhoni (2012) (தோணி)
Music
Ilaiyaraaja
Year
2012
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Na. Muthukumar
வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை...
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை...
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னாடங்காய்ச்சி வாழ்க்கை
கனவில்தானே நமக்கு பல அரண்மனைங்க இருக்கு
தண்ணிக்கும் தரைக்கும் அலையும்
ஒரு வாத்தைப் போல வாழ்க்கை
மனசில் சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா ?
சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு ..
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்..

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...

கும்புடு போட்டு போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூனிப் போச்சுடா
உறவு நெறைய இருக்கு, அது செலவுதானே நமக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா
தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல
சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் மொளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை...
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை...
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.