பூவனத்தில் மரமுண்டு பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
Thambi (2006) (தம்பி)
Music
Vidyasagar
Year
2006
Singers
P. Jayachandran, Swarnalatha
Lyrics
Na. Muthukumar
பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகனே கண்ணே வா

பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே பெண்ணே வா

ஆண் : அன்னை மடித்தாலாட்டிலே
திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு
அம்பாரிகள் நாம் போனதும்

ஆண் : வெண்டைக்காயின்
காம்பைக் கிள்ளி
தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு
ரசித்ததுவும்

ஆண் : மொட்டைமாடி வெண்ணிலவில்
வட்டமாக நாம் அமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி
ருசித்ததுவும்
எங்கள் வீடுபோல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : காற்றில் மரம் ஆடக்கண்டு
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று
தந்தை சொல்ல பயமேதின்று

ஆண் : பள்ளிவிட்டுப் பசியுடன்
துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன்
சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில்
சொந்தம் எல்லாம் துடிக்கையில்
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்
எங்கள் வீடு போல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே கண்ணே வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.