என்னம்மா தேவி ஜக்கம்மா பாடல் வரிகள்

Movie Name
Thambi (2006) (தம்பி)
Music
Vidyasagar
Year
2006
Singers
Karthik, Manickka Vinayagam
Lyrics
Na. Muthukumar
ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ னா ஆஆ

ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
ஏ என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா

ஆண் : சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
ஹே சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்

ஆண் : பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ மம்மின்னு
சொல்லுறான்

ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா

ஆண் : சந்தன பூமி
சந்தன பூமி கந்தகம்
ஆச்சு கந்தகம் ஆச்சு
காத்துக்கும் இப்போ
திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல
மழை எங்க பெய்யுது
குளத்துல தான் இப்போ
கிரிக்கெட்டு நடக்குது

ஆண் : அட விவசாயம்
செய்யின்னா வேணான்னு
சொல்லுறான் வெளிநாடு
போயிதான் ஒட்டகம்
மேக்கிறான்

ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா

குழு : ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஆண் : ஜக்கம்மா ஜக்கம்மா

ஆண் : கோட்டையில்
கொடியெல்லாம் கிழியாம
பறக்குது குமரிப்பொண்ணு
துணி கிழிஞ்சேதான்
தொங்குது நத்தைக்கு கூட
முதுகுல வீடு நடைப்பாதை
தானே ஏழைக்கு கூடுடி

ஆண் : அட சாமிக்கு
படைக்கிற மனுஷன
கும்பிட்டோம் சாக்கட
அள்ளுற கைகள
விட்டுட்டோம்

ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா

ஆண் : சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்

ஆண் : பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ மம்மின்னு
சொல்லுறான்

ஆண் : ஆஆ
ஆஆ னா ஆஆ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.