ஓ பெண்ணே இவன் பாடல் வரிகள்

Movie Name
Naan Sigappu Manithan (2014) (நான் சிகப்பு மனிதன்)
Music
G. V. Prakash Kumar
Year
2014
Singers
Vandana Srinivasan, Al-Rufian
Lyrics
Na. Muthukumar
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலை கூட மழையாக்குவேன்
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே
உனக்கென்று யார் சொல்வது
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

நீ பிள்ளை போலே தூங்க எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான் வேலி போட்டு உன்னை காவல் செய்வேன்
காற்றும் உன்னை தொட்டால் உடனே கைது செய்வேன்
உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி போனேன்
உன் பார்வை தீண்டும் போது கண்ணாடி போலே உடைந்தேனே
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

அடி ஏதோ புரியா ஆசை நெஞ்சின் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல் அடடா புதிதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட
எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட
எங்கே நீ இருந்தாய் பெண்ணே
எப்படி நீ எனக்குள் வந்தாய்
உன்னாலே நானும் உறக்கம் கேட்டு தன்னாலே நானும் எழுந்தேனே
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலை கூட மழையாக்குவேன்
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே
உனக்கென்று யார் சொல்வது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.