பொய்க்கால் குதிரை பாடல் வரிகள்

Movie Name
Samar (2013) (சமர்)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Na. Muthukumar, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

காலையில் கண் விழித்தால்
இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கண் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேரி
உன்னை நீயே உற்றுப்பார்

இந்த க்லைடாஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை
உருத்துவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்
யார் யார் யார் யார்

இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
(இவன் பார்த்த)

மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் மாய தீயிலே வீழ்ந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா
(மூச்சு வாங்குதே)

இவன் பாதை எங்கிளும் வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா
(மூச்சு வாங்கியே)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.