அன்புள்ள சந்தியா பாடல் வரிகள்

Movie Name
Kaadhal Solla Vandhen (2010) (காதல் சொல்ல வந்தேன்)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத் தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம் இங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்

எந்த பக்கம் நீ செல்லும் போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காதல் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை.
உந்தல் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
தாயைக் கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப் போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா
என்றோ யாரோ உன் கைகள் தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாக கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் இன்பமே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத் தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து

அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன் 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.