ஓடி ஓடி நீ பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Poojai (2014) (பூஜை)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Palakkad Sriram
Lyrics
Na. Muthukumar
ஓடி ஓடி நீ
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்
போதும் போதும் என
கொடுத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் வந்து
நிற்க்கும்
பல்லாண்டு காலம் கண்டு
தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன்
நெஞ்சில் சாயாது கொஞ்சம்
வேற வழியே இல்ல
பூஜை ஒன்று
போடப் போறானெ
ஒரு தொணையே வேணாம்
தன்னந்த் தனியா
மோதப் போறானெ
ஓராயிரம் ஈட்டியாய்
சீராப் போறானெ
ஓடி ஓடி நீ
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்

தேடி தேடி கால்கள்
எங்கோ போகுதே
மனம் வாடி வாடி
கொஞ்சம்
ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும்
கண்ணா மூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே
பட்டாம் பூச்சி தான்
தனியாக ஒரு மானை தேடியே
நீ ஓடும் ஒரு ஓட்டம்
தடம் மாறும் உன்
எண்ணம் எங்கிலும்
ஏனோ ஒரு வாட்டம்
கண்ணீரை நீயும்
சிந்த கூடாது
கண்டாலே போதும்
தூக்கம் தொடராது
வாழ வச்ச தெய்வம்
விட்டு போனதே
அதை
அறியாதிந்த நெஞ்சம்
விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னு
சாஞ்சு கெடக்கே
அதை யாரு வந்து சொல்ல
சாபம் இருக்கே
கலங்காதே இது கடவுள்
சோதனை காணாம போகும்
பதறாதே நீ மீண்டு
வந்ததும் பத்து தலைமுறை
பேசும்
வாடாதே பூமி
விடி யா த தா
போடா போ உன்னால் முடியாததா
ஆ அ ஆ அ ….

வேற வழியே இல்ல
பூஜை ஒன்று
போடப் போறானே
ஒரு தொணையே வேணாம்
தன்னந்த் தனியா
மோதப் போறானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப் பாயும்
ஓடி ஓடி நீ
ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான்
உன்னை தொடரும்
தேவை இந்த
யுத்தம்
போதும் போதும் என
கொடுத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் வந்து
நிற்க்கும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.