அக்கம் பக்கம் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kireedam (2007) (கிரீடம்)
Music
G. V. Prakash Kumar
Year
2007
Singers
Sadhana Sargam
Lyrics
Na. Muthukumar
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நான நன... நான நன... நானா...... ன நானா
நான நன... நான நன... நானா...... ன நானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.