தாவித்தாவி போகும் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Dhoni (2012) (தோணி)
Music
Ilaiyaraaja
Year
2012
Singers
Ilaiyaraaja
Lyrics
Na. Muthukumar
தாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
தாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர் மேகம் ஏங்கு போனாலும்
உந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ
தாவி தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கரஹோஷும்
வெறும் பந்தை நாம் இருந்தால் பல கால்கள் விளையாடும்
நாளை என்ன ஆகும் என்று அறியாமல்
காலை மாலை வேளை தோறும் தூங்காமல்
அதி காலை நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என் அருகில் வந்து என்னை தொட்டு தழுவ…

தாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

கடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் உரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
எந்த காற்று தீண்டும் என்றா குழல் தேடும்
ஏந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வழு காலத்தில் அட யாரும் தனி இல்லை
உன் தனிமைதன்னை தனிமையாகும் துணைகள்

தாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர் மேகம் ஏங்கு போனாலும்
உந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ
போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.