அடடா ஒண்ணும் சொல்லாத‌ பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Vasuvum Saravananum Onna Padichavanga (2015) (வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌)
Music
D. Imman
Year
2015
Singers
Benny Dayal
Lyrics
Na. Muthukumar
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத 
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
ஹாய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே

அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அனச்சா தள்ளிச் செல்லாத 
அனையக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் உன்னை பூப்போல படச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல கொடுத்தானே
ஹாய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே

வயதும் மனதும் உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா நான் துடிப்பேன்
வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு
இடையினம் தான் நான் ரசிப்பேன்
குறும்பாக நீ சிரிக்க சாட்சி போட
அதற்கு இந்த ஊரில் இல்ல விலையே
ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு வைச்ச சிலையே

இரு இதயம் இணையும் தருணம்  போகாதே

இதழும் இதழும் அடி ஒன்றாக சேர 
விரும்பிடுதே  நெருங்கிடுதே
இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே

சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே.....
சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச என்னையே

இரு இதயம் இணையும் தருணம்  போகாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.