விழியிலே விழியிலே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Ainthu Ainthu Ainthu (2013) (ஐந்து ஐந்து ஐந்து)
Music
Simon
Year
2013
Singers
Chinmayi, Hariharan
Lyrics
Na. Muthukumar
விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே
இதுஎன்ன இதுஎன்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே
காதலா கைகோர்க்கும் காலம் வந்ததடா

காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும்
நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன்
இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்

உனைநான் காணும் முன்னே என் வாழ்கை வெள்ளைகோடு
புதிதாய் வர்ணம் தந்தாய் பல வானவில்லை வரை
எல்லாம் எல்லாம் எல்லாம் இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே

உனைநான் காணும் முன்னே என் வெட்கம் அல்லிகோடு
வந்தாய் ஏதோ செய்தாய் இது எங்கோபோச்சு தேடு
எல்லாம் எல்லாம் எல்லாம் இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே

என்னுள் என்று நீ.. ஆ.. ஆஆ

என்னுள் என்று நீ வந்தாய்
என்னை எப்படி வென்றாய் எனக்கே தெரியாமலே …

விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே
இதுஎன்ன இதுஎன்ன இருதயம்

ஆ & மிருதங்கம் இசைக்குதே காதலா

கைகோர்க்கும் காலம் வந்ததடா…

காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும்
நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன்
இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும்

ஆ & அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்

இதழும் இதழும் மோதி ஒரு முத்த சண்டைபோட
இரவும் பகலும் தினமும் நாம் நம்மை நம்முள் தேட
உயிரும் உடலும் எங்கோ ஒருலகைபோல ஓட
துணிவாய் தொலைவோம் அழகே

இதயம் இதயம் இதயம் ஒரு இன்ப தொனியிலே
இனிதாய் இனிதாய் இனிதாய் .. ஆ ஆ
இருந்தும் இருந்தும் இருந்தும் சிறுதுன்பம்
இருக்கிற வழியும் சுகம்தான் அழகே

எங்கும் காதலா..

காதலா

எங்கும் காதலா என்றாய்
என்னை அன்பிலே வென்றாய்..எனக்கே தெரியாமலே

விழியிலே விழியிலே சுயம்வரம்

நடக்குதே இதுஎன்ன இதுஎன்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே
காதலா கைகோர்க்கும் காலம் வந்ததடி
காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும்
நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன்

இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.