ஏலேலோ மெதப்பு பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Naan Sigappu Manithan (2014) (நான் சிகப்பு மனிதன்)
Music
G. V. Prakash Kumar
Year
2014
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே

ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதுடா மனசு பறக்குதடா டோய்
விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கெடைக்குதே
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே
தூங்கும் பொம்மைக்கு தான் சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி காலை ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனி மாறும்
எங்கோ மெதக்குரனே என்ன புடிங்கடா

ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே

நத்தைய போல் இருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுன்னு எழுந்து இப்போ நடக்க தோனுதடா
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவுந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா
பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா
சுக்கிர திசை எனக்கு சலாம் வைக்குதடா
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே

மலையா மழையடிச்சு மெதுவா கிளை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
பரந்தா கிழியுமின்னு பரணில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே
விதையா பொதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான்
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.