அருவா மினுமினுங்கா பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Veyil (2006) (வெயில்)
Music
G. V. Prakash Kumar
Year
2006
Singers
Lyrics
Na. Muthukumar

எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா
எட்டு நாட்ட காக்க வந்த பெரிய கருப்பா

எட்டு வச்சு நடந்து வாரோம்
கருப்பன் எல்லைக்குத்தான் நடந்து வாரோம்

அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க

திருக்கு மீச பாரு
திருநீறு பூச பாரு

உருட்டு பல்ல பாரு
குங்கும போட்ட பாரு

கருப்பானோட வெட்டு பாரு
கருங்கெடா குட்டி சோறு

துண்டு பீடி கட்ட பாரு
சுதி ஏத்த பட்ட சாரு

கட்ட செருப்பு மாட்டி
கருப்பனுக்கு காலுக்கு சலங்க கட்டி

காக்கும் கருப்பா சாமி
கால மாத்தி ஆடி வாடா

அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் போங்க

பட்டி பேசி ஆத்தா
பள பளக்கும் சேலையா கட்டி ஜாக்கெட்டு போடாம வந்தாளே

பேச்சி ஆத்தா ஆளக கண்டு எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க

அவ சட்ட மட்டும் போட்டுருந்தா ஜூப்பரு
ஜாக்கெட்டு போடாம வந்தது க்லாமரு

எத்தனையோ பெருசுக தவிக்கிறான்
அவ ஆளக கண்டு நம்மாளு எழைக்கிறான்

எழைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்

மாட்டுக்கு பட்ட போட்டான்
மனுசனுக்கு நாமம் போட்டான்

பேசிக்கு பேச்சு இங்க தலைய
ஆட்ட விட்டான்

அண்ணணுக்கு ரெண்டு தாரன் அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமயப் போரா அதுக்கொரு தலையாட்டு

புருசன் இல்லாம புள்ளப் பெத்தா அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்கு போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டு

வீட்டுக்கு வீடு டீவீ
புள்ள எங்க படிப்பாண்டி போயி

அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தாக்க
நெஞ்சு கொதிக்குது பாவி

அடிக்கடி முத்த காசி வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடி

தொப்புளுக்கும் கீள சேலையாடி
புள்ள பம்பரமா வாங்குறான் புரிஞ்சுக்கடி

அட தெனம் தெனம் என்ன மோதி
கலர் டீவீ ய வாங்க சொன்ன பாவி

சாமிக்கு மாலா மிச்சம்
பூசாரிக்கு பொங்க மிச்சம்

இழந்தாரிக்கு நட தான் மிச்சம்
கொமாரிக்கு நெனப்பு மிச்சம்

பூட்டுக்கு சாவி மிச்சம்
ஆட்டுக்கு புழுக்க மிச்சம்

கெளவனுக்கு இழப்பு மிச்சம்
கெழவிக்கு உலக்க மிச்சம்

எவன்டா அவன் எடுபட்ட பய
எடு வெளக்கு மாத்த

அட குடிக்க இப்ப கூழும் இல்ல
உடுத்த ஒரு துணியும் இல்ல

இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா
குடும்பம் என்ன ஆகுறது

நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு

நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு

அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா

அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா

அடி ஊருப் பய பேச்ச கேட்டு
காறித் துப்ப வைக்கிறியே

அடி அருவா எடுத்து வந்தா
நாக்க அறுத்து புடுவேன்

அடி அருவா எடுத்து வந்தா
நான் நாக்க அறுத்து புடுவேன்

கண்டவங்க நின்டவங்க காறி துப்ப
நிப்பவனே

இப்படி கட்டுனாவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே

இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி

ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி

அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி

அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி

இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்

ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.