வெயிலோடு விளையாடி பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Veyil (2006) (வெயில்)
Music
G. V. Prakash Kumar
Year
2006
Singers
Jassie Gift, Prasanna, Tippu
Lyrics
Na. Muthukumar
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்

தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்

அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்

காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்

எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.