ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்

Movie Name
Baana Kaathadi (2010) (பாணா காத்தாடி)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே…

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல

எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தனடி
கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் வருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி

நீ எந்தன் வீட்டுகுள் நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் என்னாளும் இளைப்பார
தோள்சாய வந்தயடி
எந்த வழி செல்ல புரியாமல் நான் நிற்க
எதிரில் ஒரு தேவதை ஹோ ..
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி
மீட்டுதந்தாள் என்னை
ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்தேனடி

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே… 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.