என்ன இதுவோ என்னைச் சுற்றியே பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Aanandham (2001) (ஆனந்தம்)
Music
S. A. Rajkumar
Year
2001
Singers
Hariharan
Lyrics
Na. Muthukumar
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.