Kannil Theriyum Lyrics
கண்ணில் தெரியும் பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
Movie Name
Angadi Theru (2010) (அங்காடித் தெரு)
Music
Vijay Antony
Year
2010
Singers
G. V. Prakash Kumar
Lyrics
Na. Muthukumar
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா ?
இது மாறுமா ?
எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கே உண்டு
மனிதம் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை
கண்ணும் காதும் கையும் காலும்
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர் எங்கும் இல்லை
அகிலம் எங்கும் அன்பின் விதை
அள்ளித் தூவ ஆட்கள் வேண்டும்
வருங்காலத்தில் வறுமை இல்லா உலகம் வேண்டும்
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா
இது மாறுமா?
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா ?
இது மாறுமா ?
எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கே உண்டு
மனிதம் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை
கண்ணும் காதும் கையும் காலும்
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர் எங்கும் இல்லை
அகிலம் எங்கும் அன்பின் விதை
அள்ளித் தூவ ஆட்கள் வேண்டும்
வருங்காலத்தில் வறுமை இல்லா உலகம் வேண்டும்
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிகக் கொடுமை
இளமையில் வறுமை
பசி தான் மிகப் பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா
இது மாறுமா?
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.