எப்படி இருந்த என் பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Santhosh Subramaniam (2008) (சந்தோஷ் சுப்ரமணியம்)
Music
Devi Sri Prasad
Year
2008
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆண்: எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

பெண்: எப்படி இருந்த என் வயசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா

ஆண்: உனது சிரிப்பின் ஒலியில் எனது
இளமை தவிக்கிறதே

பெண்: அலையும் உனது விழியை பார்த்தால்
பயமாய் இருக்கிறதே

ஆண்: அரிது அரிது இளமை அரிது விலகி போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது (எப்படி இருந்த...)

(இசை...)

ஆண்: ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

பெண்: திட்டு கிட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீணா

ஆண்: அழகு என்பதே பருகத் தானடி
எனது ஆசைகள் தப்பா

பெண்: நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா

ஆண்: இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது

(இசை...)

ஆண்: ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

பெண்: கொக்கு வந்து போனா அட நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

ஆண்: முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே

பெண்: துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே

ஆண்: நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.