காதலுக்கு கண்கள் இல்லை பாடல் வரிகள்

Movie Name
Santhosh Subramaniam (2008) (சந்தோஷ் சுப்ரமணியம்)
Music
Devi Sri Prasad
Year
2008
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆண்: ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ... ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றாளே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ... ம்...
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வாங்கும் சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ?
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் பாடல் அவள் ராகத்தில் (ஏ காதலுக்கு...)

(இசை...)

ஆண்: ஓ.. அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கலை என்றேனே

ஆனா இப்போ... ம்..
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று க்யூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வானம் அவள் கண்களில் (ஏ காதலுக்கு...)

(இசை...)

ஆண்: ஓ... கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்தப் பீழா என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ... ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ... ம்...
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வாழ்க்கை அவள் வார்த்தையில் (ஏ காதலுக்கு...)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.