Adadaa Adadaa Adadaa Lyrics
அடடா எனை ஏதோ செய்கிறாய் பாடல் வரிகள்
Last Updated: Feb 02, 2023
ப நி நி ஸ ஸா நி நி ஸ ஸா
கரி கம பம கரி ஸநி ஸநி பா
கம பநி நி பநி நி மம ரிக ரிக நிநி த
கரி கம கரிச ரிகரி ஸ நி ஸ
நிஸ கரிச நிஸ நி நிப
நி ஸ கரிச பமபமகரிச
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என்
இமை ரெண்டும் கைகள் தட்டுதே.....(அடடா)
நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி.....(அடடா)
ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்..(அடடா)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.