உன்னாலே கண்கள் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Darling (2015) (2014) (டார்லிங்)
Music
G. V. Prakash Kumar
Year
2014
Singers
Shankar Mahadevan, Shreya Ghoshal
Lyrics
Na. Muthukumar
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாத்டி

(உன்னாலே கண்கள்)

ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்
எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கை மீறி உயிர் ஓடுதே

(உன்னாலே கண்கள்)

முழுதா நிலவு நம்மை பார்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் போய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மே தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதாட

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.