ஒரு முகமோ இரு முகமோ பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Pa. Vijay
Lyrics
Na. Muthukumar
ஆண்: ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ.......
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ....
ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ......
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ....

(இசை...)

ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ....
ஓஹோ ஹோ ஹோ ஹோ....
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்..
இடியின் மடியில் தினம் படுப்பான்..
அடியில் வெடியில் உயிரெடுப்பான்..
நிழல் போல் இருப்பான்....
எதிரும் புதிரும் போல் இருப்பான்..
அதிரும் செயலில் பூப்பறிப்பான்..
உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்..
நெருப்பாய் நடப்பான்...
உலகம் அதிகாலை.. சோம்பல் முறிக்கும்...
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்....
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்...
மறு சமயம் இவன் செயல் மாயம்....

ஜக ஜா ஜா ஜாம் ஜஜாம் ஜகிட ஜகிட ஜகிட ரகலக (ஒரு முகமோ...)
(இசை...)

ஆண்: தெரிக்கும் தெரிக்கும் இசை பிடிக்கும்..
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்..
வெடிக்கும் வெடிக்கும் வெடி பிடிக்கும்..
இரவின் தலைவா.. ஹேய்..
எதையும் செய்வான் உடனுக்குடன்..
தேநீர் விருந்து ஆபத்துடன்..
செல்வான் வெல்வான் வேகத்துடன்..
இயங்கும் இளைஞன்...
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே..
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே..

குழு: அட போனால் போகாட்டும் என்பான்..
தினமும் பகையையே உணவென உண்பான்..
ஜக ஜக ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜோம்

பெண்: ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ.......
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ.......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.