எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்

Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Thamarai
Lyrics
Thamarai
பெண்: எனதுயிரே.. எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே
நீளுமே, காதல் காதல் வாசமே....
எனதுயிரே எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்...
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

(இசை...)

ஆண்: இனி இரவே இல்லை கண்டேன், உன்
விழிகளில் கிழக்கு திசை..
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை

பெண்: உன்னை காணும் வரையில், எந்தன்
வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்... (எனதுயிரே...)

பெண்: ஆ... ஆ.... லா....
லலலலலா...... லலலலலா...... லலலலலா...... லலலலலா......
(இசை...)

பெண்: மரம் இருந்தால் அங்கே
என்னை நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐய்யோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்..

ஆண்: இனி மேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே
பெண்: எனதுயிரே எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்...
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே கரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

பெண்: ம்ம்ம்......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.