கேளாமல் கையிலே பாடல் வரிகள்

Movie Name
Azhagiya Tamil Magan (2007) (அழகிய தமிழ் மகன்)
Music
A. R. Rahman
Year
2007
Singers
Thamarai
Lyrics
Thamarai
பெண்: கேளாமல்... கையிலே... வந்தாயே... காதலே...

(இசை...)

பெண்: கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற

ஆண்: கேளாமல்.. கையிலே... வந்தாயே காதலே...
என் பேரில்.. கூவிடும்.. உன் பேரும்... கோகிலம்

பெண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன்
கையில் நான் அணில்

(இசை...)

ஆண்: இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

பெண்: மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
ஆண்: கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
பெண்: நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு (கேளாமலே...)

குழு: பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே புதிய ........ பாமரன்முதலே
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே

பெண்: கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

ஆண்: பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

பெண்: மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சிக்கிரம் வருமோ
ஆண்: தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமோ (கேளாமல்...)

ஆண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்

பெண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.