நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
7G Rainbow Colony (2004) (7ஜி ரெயின்போ காலனி)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
KK
Lyrics
Na. Muthukumar
ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

ஆண் : எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே

ஆண் : உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா


ஆண் : தூது பேசும்
கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

ஆண் : உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

ஆண் : முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

ஆண் : பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா

ஆண் : பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா

ஆண் : தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.