தய்யத் தக்கா தக்கா பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Vettai (2012) (வேட்டை)
Music
Yuvan Shankar Raja
Year
2012
Singers
Harini, Na. Muthukumar, Saindhavi, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

எக்கா எக்கா தவளக்கா
ஏரிக் கர மீனக்கா
எப்படி வேணும் மாப்பிள்ள
எடுத்து விடுறேன் கேளக்கா

பட்டாம்பூச்சி கேட்டுக்கோ
தொட்டாச் சிணுங்கி கேட்டுக்கோ
அக்கா குருவி கேட்டுக்கோ
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


அய்யனாரத் தான் போல
ரொம்ப பெரிய மீசியும் வேணா

அம்பிப் பைய்யலப் போல
அட கம்பி மீசையும் வேணா

ரொம்ப படிச்சவன் வேணா
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா

பென்சில் பாடியும் வேணா
மைக் டைசன் போலவும் வேணா

காதுச் சூட்டில் வேர்வை வழிய
செல்லில் பேசி கெஞ்சணும்

மேரேஜான பிறகும் கூட
சார்ஜரோடு கொஞ்சணும்
ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது

தோளில் நான் சாயும் போது
தோழன் போல் மாற வேண்டும்
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


கட்டம் கட்டமா தானே
ஒரு சட்டம் போட்டவன் வேணா

கட்டம் ஒண்ணு நான் போட்டா
அத தாண்டிப் போறவன் வேணா

ஷாப்பிங் பண்ண நான் போனா
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா

தூண்டில் மாட்டின மீனா
அவன் அன்பில் சிக்கணும் தானா

சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது
நான் சந்தேகமா பாத்தா
அவன் மெரளக் கூடாது
என்ன பாராட்ட வேணா
ரொம்ப சீராட்ட வேணா
ஒரு பார்வ அது போதும் எப்போதும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.