பூக்கள் பூக்கும் பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Madrasapattinam (2010) (மதராசபட்டினம்)
Music
G. V. Prakash Kumar
Year
2010
Singers
Andrea Jeremiah, G. V. Prakash Kumar, Harini
Lyrics
Na. Muthukumar
ஆ : தானா தோம் தன னா  தானா தோம் தன னா 
தானா தோம் தன னா  தானா ந தன னா
தானா தோம் தன னா  தானா தோம் தன னா 
தானா தோம் தன னா  தானா ந தன னா

ஆ : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
பெ : புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ 
(தானா....)

ஆ : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெ : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆ : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெ : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே
ஆ : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்.
பெ : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

ஆ : பூந்தளிரே......

பெ : Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive; It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?

ஆ : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெ : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
ஆ : யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெ : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ : பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெ : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
ஆ/பெ : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ....

ஆ : (தானா....)

பெ : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆ/பெ : என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆ : (தானா....)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.