கனா காணும் காலங்கள் கரைந்தோடும் பாடல் வரிகள்

Movie Name
7G Rainbow Colony (2004) (7ஜி ரெயின்போ காலனி)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
Harish Raghavendra, Srimathumitha
Lyrics
Na. Muthukumar
பெண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

ஆண் : இது இடைவெளி
குறைகிற தருணம் இரு
இதயத்தில் மெல்லிய
சலனம் இனி இரவுகள்
இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்

பெண் : இது கதியில்
நடந்திடும் பருவம்
தினம் கனவினில்
அவரவர் உருவம் சுடும்
நெருப்பினை விரல்களும்
விரும்பும் கடவுளின் ரகசியம்

ஆண் & பெண் : உலகில்
மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும்
பாஷை மெதுவா இனி
மழை வரும் ஓசை ஆஆ…..

ஆண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓஹோ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

ஆண் : தரிரா ……..

பெண் : நனையாத
காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேர் என்றால்
நட்பு என்று பேரில்லை

ஆண் : பறக்காத
பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை
தேடி போகிறதோ திரி தூண்டி
போன விரல் தேடி அலைகிறதோ

பெண் : தாயோடும் சிறு
தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது
கிடையாதே தாவி வந்து
சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி
இல்லையே

ஆண் : …………………………..

ஆண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ

பெண் : விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

ஆண் : இது என்ன காற்றில்
இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி
வேலை அழிகிறதே அதி காலை
நேரம் எல்லாம் தூங்காமல்
விடிகிறதே விழி மூடி தனக்குள்
பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

பெண் : நடை பாதை
கடையில் உன் பெயர்
படித்தால் நெஞ்சுக்குள்
ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

ஆண் & பெண் : பட படப்பாய்
சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது
ஏன் நில நடுக்கம் அது
கொடுமைகள் இல்லை மன
நடுக்கம் அது மிக கொடுமை

பெண் : …………………………..

பெண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓஹோ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.