உனக்கென இருப்பேன் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kaadhal (2004) (காதல்)
Music
Joshua Sridhar
Year
2004
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதேன்...கண்மணியே......

வழித்துணையாய் நான் இருக்க

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னைநான்பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணீர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்...

நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...கண்மணியே
அழுவதேன்...கண்மணியே....
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.