தொட்டு தொட்டு போகும் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Kaadhal (2004) (காதல்)
Music
Joshua Sridhar
Year
2004
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

இந்த கனவு நிலைக்குமா?
தினம் காண கிடைக்குமா?
உன் உறவு வந்ததால் புது உலகம் பிறக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே
வேலி போட இதயம் மேல வெள்ளை கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்கையிலே பார்த்த சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து வியந்திடலாமே

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம்
எண்ணை கேட்கிறதே புட்டி வைத்த
உறவுகள் மேல புதிய சிறகு முளைகிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் எண்ணை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.