காதல் வந்து பொய்யாக பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sundarapandian (2012) (சுந்தரபாண்டியன்)
Music
N. R. Raghunanthan
Year
2012
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றை கூந்தல் மோதும் போதும்
நெற்றி பொட்டில் காய்சல் வந்து குடியேறும்   
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்
கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலை போலே கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டி கொண்டால் அய்யோ பிடிக்கும் பைத்தியமே

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

காற்றில் கையை வீசிட தோன்றும்
மேகம் பார்த்து பேசிட தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும் போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்ய தெரியாதே
பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை
கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.