Minnala Pudikkira Vayasithu Lyrics
மின்னல புடிக்கிற வயசிது பாடல் வரிகள்
Last Updated: Feb 02, 2023
மின்னல புடிக்கிற வயசிது
மேகத்தில் பறக்கிற மனசிது
மள மள மள மளவென உயரத்தில்
ஏறி வாடா வாடா
ஆசையை ஜெயிக்கிற வயசிது
அனுபவம் பழகுற மனசிது
அலை அலை அலை அலையென
அனுதினம் சீறி வாடா
கொட்டாமல் எப்போதும்
தேன் கூட்டு தேனீ இருந்தால்
கட்டெறும்பும் கூட கைய வெச்சு பார்க்கும்
அஞ்சாமல் எப்போதும் நீ நெஞ்ச தூக்கி நடந்தால்
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் வாடா (மின்னல)
நகர்ந்திட நதி மறுத்தாலே
கடலினை தொட வழி இல்லை
விழுந்திட இனி தடையில்லை என வாடா வாடா
கிடந்திட நீ கல்லில்லை உடைந்திட நீ புல்லில்லை
அளவிட ஒரு சொல்லில்லை என வாடா வாடா
அட கேள்வி கேட்க யாருமில்லை
இந்த புவி மீது என்றும் சோகமில்லை
கையில காசு இல்லையா கலங்காம
சிரிப்போம் வெள்ளையா
வாழ்க்கையில் எதுவும் தேவையா
இந்த நிம்மதி போதுமடா வாடா (மின்னல)
பருந்துகள் அது எந்நாளும்
பள்ளத்தில் சென்று வாழாது
சிறகுகள் புது மலை ஏற நீ வாடா வாடா
அலைகளில் வரும் நுரையாக
ஆண்டுகள் அது கரைந்தோடும்
பொழுதுகள் அது புதையல்தான் நீ வாடா வாடா
அட தோளின் மீது பாரம் இல்லை
இனி போகும் தூரம் ரொம்ப தூரமில்லை
கனவுகள் எதுவும் நமக்கில்லை
இருந்தாலும் அதற்கு தவிக்கலை
வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை
இந்த நிம்மதி போதும் அட வாடா வாடா (மின்னல)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.